போராட்டம் நடத்திய நடிகர் கஞ்சா கருப்பு. காரணம் என்ன?
![போராட்டம் நடத்திய நடிகர் கஞ்சா கருப்பு. காரணம் என்ன?](ptmin/uploads/news/Cinema_tharshi_kancha.jpg)
11 மாசி 2025 செவ்வாய் 13:48 | பார்வைகள் : 271
காமெடி நடிகர் கஞ்சா கருப்பு திடீரென சென்னையில் உள்ள மருத்துவமனையில் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான கஞ்சா கருப்பு இன்று காலை சென்னை போரூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அங்கு மருத்துவர்கள் இல்லாததால் காக்க வைக்கப்பட்டதாக கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.
இன்று காலை சென்னை போரூர் பகுதியில் உள்ள பெருநகர மாணவர் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைக்கு நடிகர் கஞ்சா கருப்பு சென்றதாகவும், மருத்துவமனைக்கு அவர் சென்றபோது மருத்துவர்கள் இல்லாததால் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இதையடுத்து காலை 7:00 மணியளவில் தன்னையும் பிற நோயாளிகளையும் காக்க வைத்ததாகக் கூறி கஞ்சா கருப்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டம் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், நடிகர் கஞ்சா கருப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை என்பதும், கடந்த 2023 ஆம் ஆண்டு ’எண் 6 வாத்தியார் கால்பந்துக் குழு; என்ற படத்திற்கு பிறகு அவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
![](/images/engadapodiyalxy.jpg)