Fleury-Mérogis - சிறைச்சாலை!!
17 கார்த்திகை 2017 வெள்ளி 15:00 | பார்வைகள் : 18217
குற்றங்கள் அதிகரித்தால் சிறைச்சாலைகளையும் அதிகரிக்க வேண்டும். 2030க்குள் மேலும் பல சிறைச்சாலைகள் கட்டப்படும் என ஜனாதிபதி மக்ரோன் அறிவித்திருந்தார். அதை விடுங்கள்.... ஐரோப்பாவின் மிகப்பெரிய சிறைச்சாலை நமது பிரான்சில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அதும் பரிசின் புறநகர் பகுதியிலேயே உள்ளது...
Essonne இல் உள்ள Fleury-Mérogis நகரில் உள்ளதால், இந்த சிறைச்சாலைக்கு 'அதே'பெயரை வைத்துவிட்டார்கள். 180 ஹெக்டேயர்கள் நிலப்பரப்பில் 1964 தொடக்கம் 1968 வரையான நான்கு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.
சிறைச்சாலைக்குள் மொத்தம் ஐந்து தொகுதிகள் தனித்தனியே உள்ளன. ஒவ்வொன்றும் நான்கு அடுக்குகள் கொண்டது. அதிகளான ஆண் கைதிகள் தங்க வைப்பதற்கும், குறைந்த அளவு பெண்கைதிகள் தங்கவைப்பற்கும் உரிய வசதிகள் உண்டு. ஒவ்வொரு தொகுதிக்குள்ளும் 900 பேர் வரை தங்கலாம்.
அதேவேளை மிக உறுதியான பாதுகாப்பும் சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. கைதிகள் 'எஸ்கேப்' ஆகாமல் தடுப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கட்டிடத்தின் மேற்பரப்பில் மின்சார வயர்கள் அமைக்கப்பட்டுள்ளன. உலங்கு வானூர்தி இறங்குவதை தடுப்பதற்கு.
பல முக்கியமான கைதிகளை இந்த சிறைச்சாலை கண்டுள்ளது. மிக குறிப்பாக, தற்போது நவம்பர் 13 தாக்குதலில் கைது செய்யப்பட்ட மிக முக்கிய குற்றவாளியான சாலா அப்தெல்சலாம் இங்கு தான் சிறைவைக்கப்பட்டுள்ளான்.
சாலா அப்தெல்சலாமோடு தற்போது இங்கு 3,800 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.