அமெரிக்காவில் ஜெட் விமானங்கள் மோதி விபத்து! ஒருவர் பலி

11 மாசி 2025 செவ்வாய் 13:53 | பார்வைகள் : 3861
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில் ஜெட் விமானங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தத்துடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விமான நிலையத்தில் இருந்து சில மைல்கள் தொலைவில் அமைந்துள்ள, கோல்ப் மைதானத்தில் வார இறுதி நாட்களில் கோல்ப் போட்டி தொடர் நடைபெறும்.
இதனை காண்பதற்காக அதிக அளவில் கூட்டம் வரும்.
ரசிகர்கள் பலரும் ஜெட் விமானங்களில் வந்து செல்வார்கள். இந்நிலையில், இந்த விமான நிலையத்தில் 2 தனியார் ஜெட் விமானங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலியானதுடன் பலர் காயமடைந்தனர்.
இதுபற்றி மத்திய விமான போக்குவரத்து துறை நிர்வாகம் வெளியிட்ட செய்தியில், நடுத்தர அளவிலான ஜெட் விமானம் ஒன்று, நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு ஜெட் விமானம் மீது மோதி விபத்தில் சிக்கியது.
இதில், மோதிய வேகத்தில் ஓடுபாதையில் இருந்து விலகி சென்றது என தெரிவித்து உள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
இதனை தொடர்ந்து, விமான நிலையம் மூடப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025