இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் கலந்துகொள்ளாதது ஏன்?
![இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் கலந்துகொள்ளாதது ஏன்?](ptmin/uploads/news/Cinema_tharshi_DANUS.jpg)
11 மாசி 2025 செவ்வாய் 14:07 | பார்வைகள் : 275
நடிகர் என்பதை தாண்டி இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் தன்னுடைய முத்திரையை பதித்து வருகிறார் தனுஷ். அவர் இதுவரை பவர் பாண்டி, ராயன் ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். இதில் பா.பாண்டி திரைப்படம் கடந்த 2017-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அதைத்தொடர்ந்து அவர் இயக்கிய ராயன் திரைப்படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்தது. இது தனுஷின் 50வது படமாகும். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.
ராயன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் மற்றுமொரு திரைப்படம் தயாராகி உள்ளது. அப்படத்தின் பெயர் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. அப்படத்தில் பவிஷ் நாயகனாக நடித்துள்ளார். இவர் நடிகர் தனுஷின் அக்கா மகன். மேலும் அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 21ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் அருண் விஜய் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். மேலும் படக்குழுவினரும் இந்த ஆடியோ லாஞ்சில் பங்கேற்றனர். ஆனால் இந்த படத்தின் இயக்குனர் தனுஷ், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் நயன்தாரா தான் தன் பட இசை வெளியீட்டு விழாக்களில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துவிடுவார். தற்போது அவரைப் போல் தனுஷும் புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டாரா என விமர்சித்து வந்தனர். ஆனால் தனுஷ் வராததற்கான காரணம் என்னவென்றால் அவர் தற்போது ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் அவரால் பங்கேற்க முடியவில்லையாம். அந்த அளவுக்கு பிசியாக நடித்து வருகிறாராம் தனுஷ். அதுமட்டுமின்றி அவர் விரைவில் மற்றொரு படத்தையும் இயக்க உள்ள தகவல் இந்த ஆடியோ லாஞ்ச் மூலம் தெரியவந்துள்ளது.
![](/images/engadapodiyalxy.jpg)