Paristamil Navigation Paristamil advert login

காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதில் சிக்கல்

காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதில் சிக்கல்

11 மாசி 2025 செவ்வாய் 16:23 | பார்வைகள் : 161


காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகபட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 
காலநிலை சீரின்மை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குறித்த பயணிகள் கப்பல் சேவையானது நாளையதினம் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
அதற்கமைய, காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது நாளையதினம் ஆரம்பிக்கப்படமாட்டாது என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். 
 
அத்துடன், இந்த கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்