கனடாவில் பறவை காய்ச்சல் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

11 மாசி 2025 செவ்வாய் 17:29 | பார்வைகள் : 5288
கனடாவில் பறவை காய்ச்சல் நோய் தொடர்பில் எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கனடிய பறவைகளுக்கு பறவை காய்ச்சல் நோய் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே இந்த விடயம் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில தேசிய பூங்காக்களில் பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பறவைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ரக் பூங்காவில் சடலமாக மீட்கப்பட்ட பறவை ஒன்றை பரிசோதனை செய்தபோது அந்தப் பறவைக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டு இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.