Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானிய தம்பதிகளின் சடலங்கள் மீட்பு... மர்மம் நீடிக்கிறது!!

பிரித்தானிய தம்பதிகளின் சடலங்கள் மீட்பு... மர்மம் நீடிக்கிறது!!

12 மாசி 2025 புதன் 07:47 | பார்வைகள் : 823


Aveyron நகரில் உள்ள வீடொன்றில் இருந்து பிரித்தானிய தம்பதிகள் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது மரணத்தில் சந்தேகம் தொடர்ந்து நீடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு, பெப்ரவரி 6 ஆம் திகதி இரு சடலங்களும் மீட்கப்பட்டிருதன.. இதில் மனைவின் அருகே சில நகைகள் இருந்ததாகவும், ஆயுதங்கள் எதுவும் அருகில் இல்லை எனவும், இது கொலையாக இருக்க வாய்ப்புள்ளதாகவும், இருப்பினும் இது தொடர்பில் அடையாளம் காண எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பெப்ரவரி 10 ஆம் திகதி இரு சடலங்களும் உடற்கூறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில், உடற்கூறு பரிசோதனைகளிலும் எந்த ஒரு தடயங்களும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் இடம்பெற்ற வீட்டினை காவல்துறையினர் சல்லடையிட்டு தேடி வருகின்றனர்.



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்