யுத்த நிறுத்தத்தை மதிப்பது மாத்திரமே இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுதலை - ஹமாஸ்
![யுத்த நிறுத்தத்தை மதிப்பது மாத்திரமே இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுதலை - ஹமாஸ்](ptmin/uploads/news/World_renu_ikuj.jpg)
12 மாசி 2025 புதன் 10:56 | பார்வைகள் : 653
யுத்த நிறுத்தத்தை மதிப்பது மாத்திரமே இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுதலையாவதற்கான ஒரே வழி என்பதை அமெரிக்க ஜனாதிபதி நினைவில் கொள்ளவேண்டும் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் அதிகாரி சமி அபு யுஹ்ரி ரொய்ட்டருக்கு இதனை தெரிவித்துள்ளார்.
இரண்டு தரப்பினரும் மதிக்கவேண்டிய உடன்படிக்கையொன்றுள்ளது என்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்டிரம்ப் நினைவில் கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தும் மிரட்டும் மொழிக்கு பெறுமதியில்லை அது நிலைமையை மேலும் குழப்பகரமானதாக மாற்றும் என அவர்தெரிவித்துள்ளார்.
இதேவேளை சனிக்கிழமை மதியத்திற்குள் ஹமாஸ் அமைப்பு எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் நரகத்தை போன்ற மிகமோசமான நிலை உருவாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
![](/images/engadapodiyalxy.jpg)