Paristamil Navigation Paristamil advert login

2005 பிரெஞ்சு கலவரம்! - நேற்றைய தொடர்ச்சி!!

2005 பிரெஞ்சு கலவரம்! - நேற்றைய தொடர்ச்சி!!

14 கார்த்திகை 2017 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 19023


கலவரம் தொடர்கிறது.  நவம்பர் 10 ஆம் 11 ஆம் திகதிகளில் காவல்துறையினர் மீதும் தாக்குதல் இடம்பெற்றது. கற்களை காவல்துறையினர் மீது கலவரக்காரர்கள் வீசினார்கள்.
 
கலவரக்காரர்களின் கொட்டத்தை அடக்க.. காவல்துறையினர் கண்ணீர்புகை வீசினர்.. கலவரம் மேலும் உக்கிரம் அடைந்தது.
 
நவம்பர் 14 ஆம் திகதி இரவு... ஒரு இரவில் நாடு முழுவதும் 215 வாகனங்கள் எரியூட்டப்பட்டன. 71 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அன்றைய இரவில் பொபினியின் Clichy-sous-Bois இல் உள்ள மின்சார வழங்கி வலையத்துக்குள் எறிகுண்டு ஒன்று வீசப்பட்டது. பாரிய சத்தத்துடன் அது வெடித்து மின்சார தடையை ஏற்படுத்தியது. அன்றைய நாளிலேயே 18  பேரூந்துகள் நடுவீதியில் வைத்து எரிக்கப்பட்டன. 
 
இதுபோன்ற ஓர் நாள் இரவில் நாடு முழுவதும் கலவரக்காரர்கள் சர்வ நாசம் விளைவித்தனர். இவர்களை கட்டுப்படுத்த கிட்டத்தக்க அனைத்து காவல்துறையினரும் களத்தில் இறங்கியிருந்தனர். 
 
முதல் நாள் பகலில் நன்றாக இருந்த தொடரூந்து நிலையம் மறுநாள் அடித்து நொருக்கப்பட்டு கண்ணாடிகள் சிதறடிக்கப்பட்டு இருந்தன..
 
20 ஆம் திகதி இரவு 163 வாகனங்கள் எரியூட்டப்பட்டன. தேவாலயங்கள்.. குறிப்பாக பள்ளிவாசல்கள், பாடசாலைகள், சிறுவர் பாடசாலை என அரசு தனியார் என்ற பேதம் இல்லாமல் கிடைத்ததையெல்லாம் அடித்து நொருக்கினார்கள் கலவரக்காரர்கள். 
 
அவசரகாலச் சட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்தது அரசு! கலவரக்காரர்களை களை எடுக்க ஆரம்பித்தது காவல்துறை!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்