வேலை நிறுத்தம்.. RER B பாதிப்பு!!
12 மாசி 2025 புதன் 13:17 | பார்வைகள் : 506
தொடருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதை அடுத்து RER A மற்றும் RER B சேவைகள் பாதிக்கப்பட உள்ளன.
பெப்ரவரி 14, வெள்ளிக்கிழமை இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. RATP நிறுவனம் பணியாளர்களுக்கான Orchidée எனும் மென்பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளது. இது வேலையாட்களின் பணி நேரத்தை தானியங்கி முறையில் உருவாக்கும். இந்த மென்பொருள் அறிவிப்பை கைவிடக்கோரி மேற்படி வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது.
FO-RATP மற்றும் La Base ஆகிய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்ததுக்கு அழைப்பு விடுத்துள்ளன. காதலர் தினமான வெள்ளிக்கிழமை, மேற்படி இரு RER சேவைகளும் பாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.