பரிஸ் : 14 ஆம் வட்டாரத்தில் தீ... ஒருவர் பலி!
12 மாசி 2025 புதன் 13:29 | பார்வைகள் : 13023
பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவியதில், ஒருவர் பலியாகியுள்ளார்.
பெப்ரவரி 11, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. rue Alfred-Durand வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் மாலை 7.30 மணி அளவில் திடீரென தீ பரவியுள்ளது. தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தீ அணைக்கப்படுவதற்கு முன்னரே நிலமை கட்டுப்பாட்டை மீறி வேகமாக பரவியுள்ளது.
பின்னர் இரவு 9 மணி அளவிலேயே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தீ அணைக்கப்பட்டது. வீட்டில் இருந்து வயது குறிப்பிடப்படாத ஒருவரது சடலத்தை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர்.
ஐந்தாவது தளத்தில் தீ பரவியதை அடுத்து, அந்த தளத்தில் வசிக்கும் அனைவரும் வெளியேற்றப்பட்டு, உடற்பயிற்சி கூடம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டனர்.

























Bons Plans
Annuaire
Scan