சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து பும்ரா விலகல்! யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கம், தமிழக வீரர் அணியில் சேர்ப்பு
![சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து பும்ரா விலகல்! யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கம், தமிழக வீரர் அணியில் சேர்ப்பு](ptmin/uploads/news/Sports_renu_jasper jujk.jpg)
13 மாசி 2025 வியாழன் 05:21 | பார்வைகள் : 144
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளார்.
2025ம் ஆண்டுக்கான உலக சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிப்ரவரி 19ம் திகதி தொடங்குகிறது.
8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான வீரர்கள் பட்டியலை அனைத்து அணி நிர்வாகங்களும் ஏற்கனவே வெளியிட்டுவிட்டனர்.
இந்நிலையில், இந்திய அணியின் வீரர்கள் பட்டியலில் மட்டும் சிறிது மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்aளது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
பிசிசிஐ இதனை செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11 ஆம் திகதி உறுதி செய்ததுடன், 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக அணியில் ஹர்ஷித் ராணா சேர்க்கப்படுவார் என்றும் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் போது பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக அவர் அணியில் இடம் பெற்றுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சக்ரவர்த்தி சிறப்பாக விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி.
![](/images/engadapodiyalxy.jpg)