ரிஸ்வான், சல்மான் ஆகா சதம் - 353 ஓட்டங்களை சேஸிங் செய்த பாகிஸ்தான்!
![ரிஸ்வான், சல்மான் ஆகா சதம் - 353 ஓட்டங்களை சேஸிங் செய்த பாகிஸ்தான்!](ptmin/uploads/news/Sports_renu_pak news.jpg)
13 மாசி 2025 வியாழன் 05:35 | பார்வைகள் : 228
அணித் தலைவர் மொஹமட் ரிஸ்வான் மற்றும் சல்மான் ஆகா ஆகியோரின் சதங்களுடன், 353 என்ற வெற்றி இலக்கினை பாகிஸ்தான் 6 விக்கெட் கைவசம் இருந்த நிலையில் துரத்தி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், பெப்ரவரி 14 வெள்ளிக்கிழமை நடைபெறும் முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றது.
அங்கு அவர்கள் நியூசிலாந்தை எதிர்கொள்கின்றனர்.
கராச்சியில் புதன்கிழமை தென்னாப்பிரிக்காவுடான மோதலில் 353 ஓட்டங்களை சேஸிங் செய்த போது பாகிஸ்தான் 91 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்தது.
பின்னர், நான்காவது விக்கெட்டுக்காக ரிஸ்வான் மற்றும் சல்மான் ஆகா இருவரும் ஜோடி சேர்ந்து 260 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று சாதனை படைத்தனர்.
இந்த இன்னிங்ஸில் பாகிஸ்தான் தலைவர் தனது நான்காவது ஒருநாள் சதத்தை அடித்தார், அதே நேரத்தில் ஆகா தனது முதல் சதத்தை சர்வதேச ஒருநாள் வடிவில் எடுத்தார்.
அவர்கள் முறையே ஆட்டமிழக்காது 122 மற்றும் 134 ஓட்டங்களை எடுத்தனர்.
இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானுக்காக அதிக நான்காவது விக்கெட் இணைப்பாட்டத்தை அமைத்தனர்.
2022 இல் லாகூரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 349 ஓட்டங்களை துரத்தியது ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தானின் அதிகபட்ச வெற்றிகரமான சேஸிங்காக முன்னர் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
![](/images/engadapodiyalxy.jpg)