Paristamil Navigation Paristamil advert login

2005 பிரெஞ்சு கலவரம்! - வரலாற்றில் இருந்து!!

2005 பிரெஞ்சு கலவரம்! - வரலாற்றில் இருந்து!!

10 கார்த்திகை 2017 வெள்ளி 14:30 | பார்வைகள் : 18233


கடந்த 2005 ஆம் ஆண்டு, வருட இறுதியில் நாடு முழுவதும் பெரும் கலவரங்கள் இடம்பெற்றது. மகிழுந்துகளை எரிப்பதும்..தொடரூந்து நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களை அடித்து நொருக்குவதும் என வன்முறை வெறியாட்டங்கள் இடம்பெற்றது. ஞாபகம் இருக்கிறதா??
 
சம்பவம் இங்கிருந்து ஆரம்பிக்கிறது...!! 
 
2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி, பரிசின் புறநகர் பகுதியான Clichy-sous-Bois பகுதியில் காவல்துறையினர் ஒரு விசாரணையில் இறங்கியிருந்தனர். ஒரு இரகசிய கும்பல் ஒன்று தொழில்முறை திருட்டுக்களில் ஈடுபடுகிறது என காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே இந்த சோதனை நடவடிக்கை இடம்பெறுகிறது. 
 
மாலை 5.20 மணி. காவல்துறையினரை கண்ட இளைஞர் கும்பல் ஒன்று, வீணான விசாரணைகளை தடுக்கும் முகமாக, வெவ்வேறு திசைகளில் தப்பித்து ஓடுகிறது. இதனால் காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த இளைஞர்களை துரத்தவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 
 
வெவ்வேறு திசைகளில் ஓடித்தப்பிய இளைஞர் கூட்டத்தில், 15 வயதுடைய Bouna Traoré, 17 வயதுடைய  Zyed Benna, Muhittin Altun ஆகிய மூவரும் சுவர் ஒன்றினை ஏறி குதித்து மின்சார வழங்கி கட்டிடத்துக்குள் பதுங்கிக்கொள்கின்றனர். ஆனால் எதிர்பாரா விதமாக அவர்களில் Bouna Traoré மற்றும் Zyed Benna மின்சாரம் தாக்கி இறக்கின்றனர். மூன்றாம் நபர் Muhittin Altun, மிக மோசமாக உடல் கருகி.. மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றார். 
 
இந்த சம்பவத்தை பிரபல பத்திரிகையான நியூயோர்க் டைம்ஸ், மரணப்படுக்கையில் கிடக்கும் Muhittin Altun இடம் இருந்து சில தகவல்களை பெற்று, அதை இவ்வாறு விபரிக்கிறது...
 
'Clichy-sous-Bois  பகுதியைச் சேர்ந்த 10 இளைஞர்கள் உதைப்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டு முடித்துவிட்டு வெளியேறினார்கள். அப்போது  காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதை பார்க்கின்றனர். காவல்துறையினர் நீண்ட கேள்விகளை கேட்பதோடு, சிலவேளை ஆள் அடையாள அட்டை அல்லது காகிதங்களை கேட்பார்கள், சிலவேளை காவல்நிலையத்தில் அழைத்துச்சென்று வைத்து விட்டு, பெற்றோரினை வரவழைப்பார்கள் என பயந்த இளைஞர் கூட்டம், கேள்விக்கணைகளை தவிர்க்கும் முகமாக சிதறி ஓடினார்கள். அதில் மூன்று இளைஞர்கள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளனர்.' என அந்த செய்தியினை வெளியிட்டிருந்தது!!
 
நீ பற்றவைத்த நெருப்பொன்று...  தொடரும்!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்