மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிப்பு
![மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிப்பு](ptmin/uploads/news/SriLanka_renu_20150109 rajapaksa.jpg)
13 மாசி 2025 வியாழன் 11:34 | பார்வைகள் : 200
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திவ் பாதுகாப்பு படையினர் தங்கியிருக்கும் பகுதியில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மூன்று இலட்சம் ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தினால் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தங்கியிருக்கும் பகுதியில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் கட்டணமானது ஜனாதிபதி செயலகத்தால் செலுத்தப்பட்டு வருவதாக மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
![](/images/engadapodiyalxy.jpg)