Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் ஏப்ரல் நடுப்பகுதி வரை கடும் வெப்பமான காலநிலை

இலங்கையில் ஏப்ரல் நடுப்பகுதி வரை கடும் வெப்பமான காலநிலை

13 மாசி 2025 வியாழன் 15:06 | பார்வைகள் : 4747


இலங்கையில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இது தொடர்பில்  வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க கூறியுள்ளதாவது,

தற்போது அதிகாலை வேளையில் நிலவும் குளிரான காலநிலையும் தொடரக்கூடும். 

அத்துடன், நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே சிறியளவில் மழை வீழ்ச்சி பதிவாகினாலும், வெப்பமான காலநிலை தொடரும்.
 
மழை பெய்வதற்கு ஏற்ற அளவிலான திறன் கொண்ட மேகங்களின் உருவாக்கம் குறைவாகக் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்