Paristamil Navigation Paristamil advert login

இயந்திர தீவு! - இரும்பு யானை சவாரி!!

இயந்திர தீவு! - இரும்பு யானை சவாரி!!

9 கார்த்திகை 2017 வியாழன் 17:31 | பார்வைகள் : 18039


உங்கள் வீட்டு குழந்தைகளுடன் சுற்றுலா செல்ல ஒரு அட்டகாசமான இடம் தான் இந்த இயந்திர தீவு! முழுக்க முழுக்க இயந்திரங்களிலான பொருட்கள் மாத்திரம் தான் இங்கு பார்வையிட முடியும். இந்த காட்சியகம் குறித்து சில தகவல்கள் உங்களுக்காக!!
 
Les Machines de l'île என அழைக்கப்படும் இந்த சுற்றுலாத்தலம் Nantes மாவட்டத்தில் உள்ளது. இந்த கட்டிடம் ஒரு காலத்தில் கப்பல் கட்டும் துறைமுகமாக இருந்தது. ஆனால் அந்த வரலாறு நமக்கு தேவையில்லை. நமக்கு தெரியவேண்டியது எல்லாம் இங்குள்ள இயந்திர யானை குறித்து தான். 
 
கிட்டத்தட்ட 50 பேர்கள் வரை ஏறி அமர்ந்துகொள்ளக்கூடிய இராட்சத யானை அது. 12 மீட்டர்கள் உயரமும், 8 மீட்டர்கள் அகலமும் கொண்டது. 45 தொன் எடையுள்ள இரும்பு மற்றும் மரப்பலகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த யானையில் நீங்கள் ஏறினால்.. அப்பகுதியை சுற்றி 45 நிமிடங்கள் முதுகை வளைத்து ஒய்யாரமாக நடை மேற்கொள்ளும். ஹொலிவுட் திரைப்படங்களில் வருவது போன்ற மிக மிரட்சியான அனுபவம் அது. இந்த யானை 2007 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. 
 
அட.. இந்த யானையின் தும்பிக்கையில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை பார்க்கவேண்டுமே.. 'ஒரிஜினல்' யானையே ஒரு நிமிடம் அசந்துவிடும். 
 
இந்த யானையின் 'ஐடியா' எங்கிருந்து வந்ததென்றால்.. பிரான்சில் மிக புகழ்பெற்ற Royal de Luxe எனும் நடமாடும் திரையரங்கு உள்ளது. வீதிகளில் நிகழ்வுகளை மக்கள் முன் மேற்கொள்ளுவார்கள். இவர்கள் பிரான்ஸ், பெல்ஜியம், பிரித்தானியா, கனடா, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் எல்லாம் நிகழ்ச்சிகளை நிகழ்த்துவார்கள். இவர்களிடம் ஒரு 'மெக்கானிக்' யானை இருந்தது. அந்த 'ஐடியா'வை உருவி இதான் இந்த அசத்தல் யானையை உருவாக்கியிருக்கிறார்கள். 
 
அடுத்த விடுமுறைக்கு மறக்காமல் சென்று வாருங்கள்!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்