Val-de-Marne : வீட்டின் கதவை திறந்து - துப்பாக்கிச்சூடு!

13 மாசி 2025 வியாழன் 16:18 | பார்வைகள் : 6919
வீடொன்றின் கதவை திறந்து ஆயுததாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்,
L'Haÿ-les-Roses (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. அங்குள்ள 14 ஆம் இலக்க மெற்றோ நிலையத்துக்கு அருகே உள்ள வீட்டின் கதவினை முற்பகல் 11 மணி அளவில் தட்டிய ஆயுததாரி ஒருவர், 24 வயதுடைய ஒருவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
கதவினை திறந்துகொண்டு வெளியே வந்த நிலையில் அவர் சுடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயுததாரி தப்பிச் சென்றுள்ளார். காயமடைந்த நபர் Kremlin-Bicêtre மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
7.62 மி.மீ கலிபர் வகை துப்பாக்கி ரவைகளை சம்பவ இடத்தில் இருந்து காவல்துறையினர் மீட்டனர். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1