Paristamil Navigation Paristamil advert login

வங்கிக்கடன் செலுத்தமுடியாமல் தவிக்கும் பிரெஞ்சு மக்கள்!!

வங்கிக்கடன் செலுத்தமுடியாமல் தவிக்கும் பிரெஞ்சு மக்கள்!!

13 மாசி 2025 வியாழன் 19:23 | பார்வைகள் : 1323


அதிகப்படியான வங்கிக்கடன்களினால் சிக்குண்டுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு பிரெஞ்சு மக்கள் கடன்காரர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Banque de France தெரிவித்த தகவல்களின் படி, 2024 ஆம் ஆண்டில் €4.5 பில்லியன் யூரோக்கள் கடன் மீளச் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. 600,000 பேர் அதிக கடன்களில் சிக்கித்தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு தொகையாவும், கடன்காரர்களின் எண்ணிக்கையாவும் இது இருக்கிறது. குறிப்பாக 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 11% சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் Banque de France அறிவித்துள்ளது. 

பணவீக்கம், வேலையின்மை மற்றும் மக்களின் வாங்கும் திறன் மோசமடைந்தமை போன்ற காரணங்கள் சொல்லப்படுகிறது. வீடு வாங்குவதற்காக பெறப்பட்ட கடன்களே இவற்றில் பிரதானமானவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்