Paristamil Navigation Paristamil advert login

சென்ற வருடத்தில் 6,000 இற்கும் மேற்பட்ட அகதிகள் மீட்கப்பட்டனர்!!

சென்ற வருடத்தில் 6,000 இற்கும் மேற்பட்ட அகதிகள் மீட்கப்பட்டனர்!!

14 மாசி 2025 வெள்ளி 09:00 | பார்வைகள் : 901


சென்ற ஆண்டில் 6,310 அகதிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டிருந்ததாக Nord மாவட்ட கடற்பாதுகாப்பு காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி படகுகளில் பயணித்த அகதிகளில், கடலில் மூழ்கி உயிராபத்தான நிலையில் இருந்தவர்களை கடற்படையினர் மற்றும் CROSS+ அமைப்பினர் மீட்டிருந்தனர். அவ்வாறு சென்ற ஆண்டு கடற்பயணம் மேற்கொண்டிருந்த 45,203 அகதிகளில், கடலில் மூழ்கி தத்தளித்த நிலையில் 6,310 அகதிகள் மீட்கபப்ட்டனர்.

2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1,452 பேர் அதிகமாகும்,.

அதேவேளை, மொத்தமாக 830 மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 2023 ஆம் ஆண்டில் 797 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதேவேளை, சென்ற ஆண்டில் 77 அகதிகள் கடலில் மூழ்கி பலியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்