சாள்-து-கோல் விமானநிலையம் - இடிந்து விழுந்த கூரை! - வரலாற்றில் இருந்து...!!
8 கார்த்திகை 2017 புதன் 10:30 | பார்வைகள் : 18121
சாள்-து-கோல் விமான நிலையத்தின் கூரை ஒருதடவை இடிந்து விழுந்துவிட்டது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் அது.
2004 ஆம் ஆண்டின் மே மாதம் 23 ஆம் திகதி.. சாள்-து-கோலின் 2E பகுதி அது. E50வது கதவின் அருகே, மேல் தள கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் நால்வர் கொல்லப்பட்டனர். மேலும் மூவர் காயமடைந்தனர்.
விபத்து தொடர்பான பல்வேறு விசாரணைகள் இடம்பெற்றன. கட்டுமான பணிகளை மேற்கொண்டிருந்த நிறுவனம் விளக்கமறியலுக்குள் சிக்கியது. 2003 ஆம் ஆண்டில் இருந்து இந்த நிர்மான பணிகள் இடம்பெற்று வந்தன. புதிய வடிவிலான கூரையை Paul Andreu எனும் வடிவமைப்பாளர் உருவாக்கியிருந்தார்.
மிக அழகான கூரை தான். ஆனால் உடைந்து தலையின் மேல் அல்லவா விழுந்துவிட்டது.
வடிவமைப்பளர் Paul Andreu, துபாய் நாட்டின் சர்வதேச விமான நிலையத்தின் 3 ஆம் இலக்க முனையத்தினையும் வடிவமைத்துக் கொடுத்தார். ஆனால் சோகத்திலும் சோகமாக அதே வருடம் செப்டம்பர் 28 ஆம் திகதி அக்கூரையும் இடிந்து விழுந்தது.
பணிகளை மேற்கொண்டிருந்த நிறுவனம் மீது இன்னமும் விசாரணைகள் தொடர்ந்துகொண்டுதான் உள்ளன... 13 வருடங்கள் கடந்துவிட்டன!!