உக்ரைன் போர் தொடர்பாக மும்முனை பேச்சுவார்த்தை
![உக்ரைன் போர் தொடர்பாக மும்முனை பேச்சுவார்த்தை](ptmin/uploads/news/World_renu_ytkkk.jpg)
14 மாசி 2025 வெள்ளி 08:03 | பார்வைகள் : 958
ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக மும்முனை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜேர்மனின் முனிச்சில் இன்று நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க, ரஷ்ய மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் சந்தித்துக் கலந்துரையாடுவார்கள் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதன்படி உக்ரைனில் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்து இதன் போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என்று ட்ரம்ப் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை 12.2.2025 ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் நீண்ட நேர மற்றும் பயனுள்ள தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இந்த அழைப்பின் பின்னர், உக்ரேனுடனான ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் “உடனடியாக” பேச்சுவார்த்தைகளை தொடங்குமாறு தனது தேசிய பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.