போக்குவரத்து நெரிசலில் நெடுஞ்சாலைகள்!!

14 மாசி 2025 வெள்ளி 09:57 | பார்வைகள் : 1770
பெப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய வார இறுதி நாட்களில் நாடு முழுவதும் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என வீதி போக்குவரத்து கண்காணிப்பாளர்களான Bison Futé அறிவித்துள்ளது.
பாடசாலை விடுமுறை ஆரம்பிக்க உள்ளதை அடுத்து, விடுமுறைக்காக பலர் பயணங்களை மேற்கொள்வதால் இந்த நெரிசல் ஏற்படும் எனவும், குறிப்பாக இல் து பிரான்சுக்குள் வெளிச்செல்லும் வீதிகளில் (départs) மிக நீண்ட தூரத்துக்கு நெரிசல் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
A6, A6A, A6B, A86 மற்றும் A6 நெடுஞ்சாலைகள் அதிகளவில் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.