Paristamil Navigation Paristamil advert login

பல்வேறு பெயர்களைக் கொண்ட Tour First!!

பல்வேறு பெயர்களைக் கொண்ட Tour First!!

7 கார்த்திகை 2017 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18282


பிரான்சில் இருக்கும் மிக உயரமான கட்டிடம் தான் இந்த Tour First. ஈஃபிள் கோபுரத்தினை விட உயரமாக பிரான்சில் கட்டிடம் கட்ட அனுமதி இல்லை என்பதால், ஈஃபிள் கோபுரத்தை தவிர்த்து, Tour First கட்டிடமே பிரான்சில் மிக உயர்ந்த வணிக கட்டிடம். இந்த கட்டிடத்துக்கு பல்வேறு பெயர்களும் பல கதைகளும் உண்டு. 
 
Bouygues நிறுவனத்தினால் 1974  ஆம் ஆண்டு இந்த கட்டிடம் கட்டப்பட்டது. UAP காப்புறுதி நிறுவனத்துக்காக இந்த கட்டிடம் கட்டப்பட்டதால் கட்டிடத்தின் பெயர் UAP எனவே அழைக்கப்பட்டது. அப்போது அதன் உயரம் 159 மீட்டர்கள். (522 அடி) அப்போது இது சாதாரண கட்டிடமாக தான் இருந்தது. 
 
ஆனால், UAP காப்புறுதி நிறுவனம் நஷ்ட்டத்தில் செல்ல... நிறுவனத்தையே விற்கவேண்டிய தேவை ஏற்பட்டது. பின்னர் இந்த கட்டிடம் மட்டும் எதற்கு...என நினைத்து... இந்த கட்டிடத்தையும் சேர்ந்து AXA நிறுவனத்துக்கு விற்றுவிட்டார்கள். அதுவும் ஒரு காப்புறுதி நிறுவனம் தான். 
 
1996 ஆம் ஆண்டு AXA நிறுவனம் கட்டிடத்தை வாங்கியதும் அதற்கு AXA எனவே பெயரையும் வைத்துவிட்டார்கள். 
 
2007 ஆம் ஆண்டு கட்டிடத்தில் நிர்மாண பணிகள் இடம்பெற்றது. அதுவரை இருந்த தோற்றத்தை அடியோடு மாற்றி வேறு விதமாக உருவாக்கி விட்டார்கள். 
 
இந்த நிர்மாண பணிகள் 2011 ஆம் ஆண்டு நிறைவடைந்த போது, கட்டிடம் 159 மீட்டர்கள் உயரத்துக்கு பதிலாக 225 மீட்டர்கள் இருந்தது. கட்டிடத்தின் கூரையோடு சேர்ந்து மொத்தம் 231 மீட்டர்கள் உயர்ந்து வானளாவிய கட்டிடமாக மாறியது. 
 
பிரான்சின் அதிக உயரம் கொண்ட கட்டிடமாக இது இருந்தது. இதனால் இதற்கு Tour First என பெயர் வைத்துவிட்டார்கள். 
 
இப்படி அவ்வப்போது பெயரினை மாற்றிக்கொண்டு உள்ளது Tour First! இடையில் கொஞ்ச காலம் இதனை Tour Assur எனவும்,
CB31 எனவும் இந்த கட்டிடம் அழைக்கப்பட்டது. 
 
என்ன தலை சுற்றுகிறதா?!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்