சினிமாவை விட்டு மிஷ்கின் விலக காரணம் என்ன?

14 மாசி 2025 வெள்ளி 14:25 | பார்வைகள் : 624
வித்தியாசமான கதைகளுக்கு பெயர் பெற்றவர் இயக்குனர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்து, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். இவ்வளவு ஏன், 'பிசாசு' படத்தில் ஒரு பேயை கூட அழகாக காட்டினார் மிஷ்கின்.
இப்போது ஆண்ட்ரியாவை கதாநாயகியாக வைத்து 'பிசாசு 2' படத்தை இயக்கி முடித்துள்ளார் மிஷ்கின். இந்த படம் ஒரு சில காரணங்களால் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. மேலும் விஜய் சேதுபதி நடித்து வரும் ட்ரைன் படத்தை இயக்கி வருகிறார். படங்கள் இயக்குவதை தாண்டி, அடுத்தடுத்து பல படங்களிலும் மிஷ்கின் பிஸியாக நடித்து வருகிறார்.
தமிழ் சினிமா இயக்குநர்களில் மிஷ்கின் இயக்கம் சற்று வித்தியாசமானதாகவே இருக்கும். இவரது படைப்புகளும் சரி இவர் நடிக்கும் படங்களின் கதாபாத்திர தேர்வு அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும். சமீபத்தில் இவர் வணங்கான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் மிஷ்கின். இந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது.
தற்போது இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள 'டிராகன்' படத்தில் HOD கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில், பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கேஎஸ் ரவிக்குமார், கௌதம் மேனன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். வரும் 21 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. சென்னையில் நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் மிஷ்கின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது சில புகைப்படங்கள் அவருக்கு காட்சி படுத்தப்பட்ட நிலையில், அது பற்றி தன்னுடைய கருத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது மிஷ்கின் புகைப்படம் காட்டப்பட்டது, அதை பார்த்ததும்... இன்னும் சில வருடங்களில் சினிமாவை விட்டு விலகப்போகும் நபர் என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசும் போது, பாட்டில் ராதா படத்திற்கு பிறகு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள கூடாது என்று நான் முடிவு செய்திருந்தேன். ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் தான் காரணம். என தெரிவித்துள்ளார். மிஷ்கின் சினிமாவை விட்டு விலக போவதாக கூறியது சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சினிமாவிற்காகவே தனது மனைவி மற்றும் மகளை பிரிந்து வாழ்ந்து வருவதாவும். சினிமாவை திருமணம் கொண்டதாக கூறி வந்த மிஷ்கின் இப்படி ஒரு முடிவெடுக்க என்ன காரணம் என்பதே பலரது கேள்வியாக உள்ளது.