செர்னோபில் அணுசக்தி நிலையம் மீது ரஷ்யா தாக்குதல் - உக்ரைன் குற்றச்சாட்டு

14 மாசி 2025 வெள்ளி 15:37 | பார்வைகள் : 1605
செர்னோபில் அணுசக்தி நிலையம் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைனின் செர்னோபில் அணு உலை மீது வியாழக்கிழமை இரவு ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணம் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
அணுசக்தி நிலையத்தின்மீது குண்டு விழும் காட்சியையும் அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
1986 பெருந்துயரத்தில் பாதிக்கப்பட்ட Reactor 4-இன் பாதுகாப்பு உறைவிடம் தாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் காரணமாக, கட்டிடத்தில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது.
உலக அணுஉலகளாவிய அமைப்பு IAEA, இரவு 1:50 மணியளவில் New Safe Confinement (NSC) பகுதியில் வெடிப்பு ஏற்பட்டதாக உறுதிப்படுத்தியது.
தீ விபத்து ஏற்பட்டதாகவும், radiation மட்டங்கள் இயல்பாகவே தொடர்கின்றன என்றும் IAEA அமைப்பு தெரிவித்துள்ளது.
க்ரெம்லின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ், "ரஷ்ய இராணுவம் அணுசக்தி கட்டமைப்புகளை தாக்காது. இது உண்மையல்ல" என மறுத்துள்ளார்.
மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையை தகர்க்க உக்ரைன் அரசு இந்த குற்றச்சாட்டை எழுப்பியிருக்கலாம் என்றும் கூறினார்.
பல ஆண்டுகள் பார்வையில் இருந்து நீங்கி இருந்த செர்னோபில், தற்போது போரின் இடையே புதிய அபாயங்களை எதிர்கொள்கிறது.
IAEA தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும், இதுவரை உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.