Paristamil Navigation Paristamil advert login

பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் அமைப்பு ஒப்புதல்

பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் அமைப்பு ஒப்புதல்

14 மாசி 2025 வெள்ளி 17:01 | பார்வைகள் : 987


இஸ்ரேலிய பணயக்கைதிகளை திட்டமிட்டபடி எதிர்வரும் சனிக்கிழமை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் அமைப்பினர் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டனர்.

இஸ்ரேல் தங்கள் நாட்டுச் சிறைகளில் உள்ள பலஸ்தீன கைதிகளை விடுதலை செய்வதற்கு இணக்கம் தெரிவித்தது.

சனிக்கிழமை அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுதலை செய்யாவிட்டால் காசாவில் போர் வெடிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பாக இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஹமாஸ் அமைப்பின் இந்த அறிவிப்பின் மூலம் காசாவில் போர்நிறுத்தத்திற்கு பாதிப்பு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்