இரஷ்ய யுத்தத்தை ட்ரம்ப் நிறுத்தினால் அதுவே நல்ல செய்தி! - மக்ரோன் கருத்து!!
.jpg)
15 மாசி 2025 சனி 12:00 | பார்வைகள் : 1821
இரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமாதானப்படுத்தி யுத்தத்தை நிறுத்த முடிந்தால் அதுவே மகிழ்ச்சியான செய்தி என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
"உக்ரேன் மாத்திரமே எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறது. பேச்சுவார்த்தை மேசைக்கு இரஷ்யா முன் வரவேண்டும். விளாடிமிர் புட்டினை பேச்சுவார்த்தை மேசைக்கு டொனால்ட் ட்ரம்ப் அழைத்துவரவேண்டும். ட்ரம்ப் அதை செய்ய முடிந்தால், அதுவே மகிழ்ச்சியான செய்தியாகும்!" என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் உக்ரேன் ஜனாதிபதி விளோதிமிர் செலன்ஸ்கி ஆகிய இருவரும் தொலைபேசி வழியாக உரையாடியுள்ளனர். அதன் பின்னரே மக்ரோன் இதனை தெரிவித்தார்.