Paristamil Navigation Paristamil advert login

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் திருவிழா - கோடிகளில் கொட்டும் ஐசிசி-யின் பரிசுத் தொகை!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் திருவிழா -  கோடிகளில் கொட்டும் ஐசிசி-யின் பரிசுத் தொகை!

15 மாசி 2025 சனி 10:36 | பார்வைகள் : 407


சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு சுமார் கோடி ரூபாய் பரிசுத் தொகையாக ஐசிசி அறிவித்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் வரும் 19-ம் திகதி தொடங்கி மார்ச் 9-ம் திகதி வரை நடைபெறுகிறது.

இதில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் வைத்து நடத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்த தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.

இந்தத் தொடரின் மொத்த பரிசு தொகை ரூ.59.90 கோடியாகும். இது 2017-ம் ஆண்டு வழங்கப்பட்ட தொகையைவிட 53 சதவீதம் (சுமார் ரூ.60 கோடி) அதிகமாகும்.

சாம்பியன் பட்டம் வெல்லும் அணி: ரூ.19.50 கோடி

2-வது இடம் பிடிக்கும் அணி: ரூ.9.72 கோடி

அரை இறுதி சுற்றில் தோல்வியடையும் அணிகள்: தலா ரூ.4.86 கோடி

லீக் சுற்றில் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறும் அணி: தலா ரூ.29.50 லட்சம்

5, 6-வது இடத்தை பிடிக்கும் அணிகள்: தலா ரூ.3.04 கோடி

7, 8-வது இடத்தை பிடிக்கும் அணிகள்: தலா ரூ.1.21 கோடி

தொடரில் கலந்து கொள்வதற்காக 8 அணிகளுக்கும்: தலா ரூ.108 கோடி

 

வர்த்தக‌ விளம்பரங்கள்