கொழும்பு சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு -10 நிமிடங்களுக்கு மேல் நின்றால் கட்டணம்

15 மாசி 2025 சனி 13:21 | பார்வைகள் : 485
கொழும்பில் பொது வாகன தரிப்பிடங்களில் 10 நிமிடங்களுக்கும் அதிகமாக வாகனங்களை நிறுத்தி வைக்கும் சாரதிகளிடமிருந்து மாத்திரமே கட்டணம் வசூலிக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொது வாகன தரிப்பிடங்களில் 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கும் சாரதிகளிடமிருந்து 70 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு வாகனங்களை நிறுத்தி வைக்கும் நேர அளவிற்கு ஏற்ப கட்டணத் தொகை அதிகரிக்கப்படும்.
இந்நிலையில், காலை 06.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை பொது வாகன தரிப்பிடங்களில் வாகனத்தை நிறுத்தி வைக்கும் சாரதிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும், பொது வாகன தரிப்பிடங்களைப் பயன்படுத்தியதற்கான கட்டணத்தை செலுத்திய வாகன சாரதிகளுக்கு பற்றுச்சீட்டுகளும் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.