எலான் மஸ்கின் குழந்தை - ஏற்படுத்தியுள்ள இளம்பெண்

15 மாசி 2025 சனி 14:21 | பார்வைகள் : 1382
ஐந்து மாதங்களுக்கு முன் தான் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததாக தெரிவித்துள்ள ஒரு இளம்பெண், அந்தக் குழந்தையின் தந்தை, பிரபல கோடீஸ்வரர் எலான் மஸ்க் என்று கூறி பரபரப்பை உருவாக்கியுள்ளார்.
அந்தப் பெண்ணின் பெயர் ஆஷ்லீ ( Ashley St. Clair, 31). தான் ஐந்து மாதங்களுக்கு முன் எலான் மஸ்கின் குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும், குழந்தையின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு கருதி அதை வெளியில் சொல்லாமல் மறைத்துவைத்திருந்ததாகவும் கூறியுள்ளார் அவர்.
பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தும் டேப்லாய்ட் ஊடகங்கள் இந்த விடயத்தை வெளியிடத்தான் போகின்றன என்பதால் தான் இந்த செய்தியை தற்போது வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆஷ்லீ, ஒரு எழுத்தாளரும், சமூக ஊடகப் பிரபலமும் ஆவார்.
ஆஷ்லீ கூறுவது உண்மையானால், அவர் பெற்றெடுத்த குழந்தை எலான் மஸ்கின் 13ஆவது குழந்தையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.