Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : உணவக உரிமையாளர் மீது கத்திக்குத்து தாக்குதல்!!

பரிஸ் : உணவக உரிமையாளர் மீது கத்திக்குத்து தாக்குதல்!!

15 மாசி 2025 சனி 15:01 | பார்வைகள் : 3227


பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலாளி தேடப்பட்டு வருகிறார்.

நேற்று பெப்ரவரி 14, வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. La Villette பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மேலாளர் ஒருவரை வாடிக்கையாளர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தாக்குதலாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

19 ஆம் வட்டார காவல்துறையினர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்