Paristamil Navigation Paristamil advert login

இல்-து-பிரான்ஸ்! - பிரான்சில் ஏது தீவு??

இல்-து-பிரான்ஸ்! - பிரான்சில் ஏது தீவு??

2 கார்த்திகை 2017 வியாழன் 10:30 | பார்வைகள் : 19135


இல்-து-பிரான்ஸ், பிரான்சின் சனத்தொகை அதிகம் கொண்ட மாகாணம். இல்-து-பிரான்ஸ் (Île-de-France) என்றால் 'பிரெஞ்சுத் தீவு' என அர்த்தம். நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்தது தானே தீவு..??  பிரான்சில் ஏது தீவு?? இந்த பெயர் எப்படி வந்தது??!
 
உண்மையில் இல்-து-பிரான்ஸ் எனும் பெயருக்குரிய வரலாறு எங்கேயும் பதிவாகவில்லை. இந்த பேருக்குரிய சொற்பிறப்பியல் (étymologie) 1387 ஆண்டுக்குப் பின் எங்கேயும் பதிவாகவில்லை. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் சில காரணத்தை முன்வைக்கிறார்கள். 
 
அவற்றில், இல்-து-பிரான்சை சுற்றிலும் ஆறுகள் ஓடுவதால் இப்படி ஒரு பெயர் வந்திருக்கலாம் என தெரிவிக்கின்றார்கள்.  Oise, Marne மற்றும் Seine ஆகிய நதிகள் இல்-து-பிரான்சின் எல்லைக் கோடுகளை சுற்றி சுழல்வதால் இப்படி ஒரு பெயர் வந்திருக்கலாம் என அவர்கள் குறிப்பிடுகின்றனர். 
 
இது தவிர்த்து இன்னுமொரு அனுமானமும் உண்டு. 4 தொடக்கம் 8 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் இல்-து-பிரான்சை Liddle Franke என அழைத்தார்கள். இது பேசப்பட்டுவந்த Frankish மொழியில் (பழைய பிரெஞ்சு மொழி) 'சிறிய பிரான்ஸ்' என அர்த்தம் தருகிறது. இல்-து-பிரான்ஸ் மாகாணம்.. மொத்த பிரான்சின் சிறிய வடிவம் என்பதாக இதன் அர்த்தம் உள்ளது. இதில் இருந்து கூட 'இல்-து-பிரான்ஸ்' எனும் பெயர் வந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். 
 
எது எப்படி இருந்தாலும், 1387 ஆம் ஆண்டுக்கு முன்னர் இது குறித்த எந்த தரவுகளும் பதிவாகவில்லை.. நாமும் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் முடிவுக்கே வருவோம்!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்