Paristamil Navigation Paristamil advert login

பனிச்சரிவில் சிக்கி இருவர் பலி.. ஒருவர் படுகாயம்!!

பனிச்சரிவில் சிக்கி இருவர் பலி.. ஒருவர் படுகாயம்!!

15 மாசி 2025 சனி 18:51 | பார்வைகள் : 1065


பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட மூவர், பனிச்சரிவில் சிக்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் பலியாகியுள்ளார்.  மற்றைய இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று பெப்ரவரி 15, சனிக்கிழமை இச்சம்பவம் Savoie மாவட்டத்தில் உள்ள பிரபல பனிமலையான Bonneval-sur-Arc இல் இடம்பெற்றுள்ளது. 30 வயதுகளையுடைய ஆண் மற்றும் பெண் ஆகிய இரு வீரர்களே பலியாகியுள்ளனர். 

பிற்பகல் 2 மணிக்கு அவசர பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மீட்புக்குழு விரைந்து சென்றனர். ஆனால் மீட்புக்குழு சென்றடைவதற்கு முன்னர் நிலமை கைமீறிச் சென்றுள்ளது.

காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்