Paristamil Navigation Paristamil advert login

வண்ணங்களால் ஒரு வீதி!!

வண்ணங்களால் ஒரு வீதி!!

1 கார்த்திகை 2017 புதன் 11:30 | பார்வைகள் : 18682


பிரெஞ்சு வீதிகள் என்றால் எப்போதும் கொள்ளை அழகு தான். இன்று பிரெஞ்சு புதினத்தில் நீங்கள் அவசியம் 'விசிட்' செய்ய வேண்டிய ஒரு வீதி குறித்து பார்க்கலாம். 
 
பரிசின் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள Rue Crémieux வீதி தான் அது!! கார்-து-லியோன் நிலையத்துக்கு மிக அருகில் இருக்கும் இந்த வீதியை நீங்கள் அவசியம் பார்க்கவேண்டும். rue de Lyon வீதிக்கும் rue de Bercy வீதிக்கும் இடையில், இரு தனியார் கட்டிடத் தொகுதிக்கு இடையே ஊடறுத்துச் செல்கிறது இந்த வீதி!! இந்த வீதியின் இரு பகுதிகளிலும் உள்ள உயரமான கட்டிடங்களின் மேலிருந்து கீழாக பல்வேறு வர்ணங்களை தொகுத்து வர்ணம் அடித்துள்ளார்கள். அப்பப்பா... கொள்ளை அழகு அது..! 
 
எட்டு மீட்டர்கள் அகலமும், 144 மீட்டர்கள் நீளமும் கொண்டுள்ளது இந்த வீதி. வீதி கறுப்பாகவும், வீதியின் இரு பக்கங்களும் வர்ணக்கோலத்தில் இருக்க.. அழகை ரசிக்கவே அரை நாள் தேவை உங்களுக்கு. 
 
வெறுமனே வர்ணங்கள் மட்டுமில்லாது, மூடப்பட்ட ஜன்னல்களில் அழகாக உருவாக்கப்பட்டிருக்கும் பூந்தொட்டிகள், மரச் செடிகள் மேலும் இந்த வீதியை அழகாக்கிறது. 
 
இந்த வீதி 1865 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்போது இதன் பெயர் avenue Millaud. பின்னர் 1897 ஆம் ஆண்டு, இங்கு வசித்த செல்வாக்கு மிகுத்த நபரான Adolphe Crémieux இன் நினைவாக, அவரின் பெயர் சூட்டப்பட்டது. 
 
இதைத் தவிர வேறு சொல்லிக்கொள்ளும்படியான 'ஃப்ளாஷ்பேக்' இதற்கு இல்லையென்றாலும்... தற்போது பரிசில் அவசியம் பார்வையிடவேண்டிய வீதிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. 
 
ஒரு வெயில் நாளில் இங்கு வந்தீர்களானால்.. கண்கவர் பின்னணியில் அழகாக புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்