IPL-லிருந்து விலகிய அல்லா கசன்ஃபர்: மும்பை இந்தியன்ஸ் அணியில் முஜீப் உர் ரஹ்மான்!

16 மாசி 2025 ஞாயிறு 11:32 | பார்வைகள் : 412
மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய வரவாக ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மான் இணைக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற அணி மும்பை இந்தியன்ஸ்.
இறுதி போட்டிக்கு வந்த 5 முறை கோப்பையை கைப்பற்றிய ஒரே அணியாக மும்பை உள்ளது.
இந்த மாதம் 19ம் திகதி தொடங்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.4.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் வீரர் அல்லா கசன்ஃபர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதனால் அல்லா கசன்ஃபருக்கு பதிலாக மாற்று வீரராக மற்றொரு ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மான் மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முஜீப் உர் ரஹ்மானை ரூ.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.
இதுவரை 19 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள முஜீப் உர் ரஹ்மான் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.