மட்டன் பிரட்டல்...

16 மாசி 2025 ஞாயிறு 11:23 | பார்வைகள் : 668
மட்டன் பிரட்டல் செய்யத் தேவையான பொருட்களான 1/2 கி மட்டன், 2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது, 1 பெரிய தக்காளி பொடியாக நறுக்கியது, 1 காய்ந்த மிளகாய் எடுத்துக்கொள்ள வேண்டும்.
1 பட்டை, 2 லவங்கம், 1 ஏலக்காய், 1பிரியாணி இலை, 1/2 டீஸ்பூன் சீரகம், 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய், 10 கறிவேப்பிலை, 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது எடுத்துக்கொள்ள வேண்டும்.
1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 டேபிள்ஸ்பூன் மல்லி தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா, சிட்டிகை மஞ்சள் தூள், தேவையானஅளவு உப்பு, தேவையானஅளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் பட்டை லவங்கம் ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து பின் வெங்காயம் மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா சேர்த்து வதக்க வேண்டும். பின் மட்டன் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேக விட வேண்டும்.
மட்டன் நன்றாக வெந்து தண்ணீர் வற்றி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் இறக்கி சூடாக பரிமாறி சாப்பிடலாம்.