Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் - ஜெலென்ஸ்கி வேண்டுகோள்

ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் - ஜெலென்ஸ்கி வேண்டுகோள்

16 மாசி 2025 ஞாயிறு 15:20 | பார்வைகள் : 829


ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜேர்மனியின் மியுனிச்சில் இடம்பெற்ற பாதுகாப்பு உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால பழமைவாய்ந்த உறவு முடிவிற்கு வருகின்றது என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடிவன்ஸ் தெரிவித்துள்ளார்,என உக்ரைன் ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.

எங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாமல் எங்களின் முதுகின் பின்னால் செய்துகொள்ளப்படும் எந்த உடன்படிக்கையையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஐரோப்பாவிற்கு உதவிசெய்வதற்கு அமெரிக்கா முன்வராது என கரிசனையின் மத்தியில் உக்ரைன் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

உக்ரைனிற்கு போதிய பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்காததால், எங்களை பாதுகாக்காததால் அமெரிக்காவிற்கு உக்ரைனின் கனியவளங்களை வழங்கும் திட்டத்தை தடுத்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாங்கள் நேர்மையாக பேசுவோம், ஐரோப்பாவிற்கு அச்சுறுத்தல் என வரும்போது அமெரிக்கா உதவிக்கு வராது என்பதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் நிராகரிக்க முடியாது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தனது சொந்த இராணுவத்தை கொண்ட ஐரோப்பா குறித்து பல தலைவர்கள் விருப்பம் வெளியிட்டுள்ளனர் - ஐரோப்பிய இராணுவம் குறித்து அவர்கள் தெரிவித்துள்ளனர் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்