உக்ரைன் மின் நிலையம் மீது ரஷ்யா தாக்குதல்

16 மாசி 2025 ஞாயிறு 17:20 | பார்வைகள் : 837
உக்ரைன் மின் நிலையங்கள் மீது 143 டிரோன்களை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக, அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.
ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர், இரண்டு ஆண்டுகளை கடந்து தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. போர் தொடங்கிய போது உக்ரைனின் கிழக்கு பகுதியில் பல இடங்களை ரஷ்யா கைப்பற்றியது. ஆனால் உக்ரைன், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் மோதியதால் ரஷ்யா சில இடங்களில் இருந்து பின்வாங்கியது. இந்நிலையில் இரு நாடுகளும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.
இந்த தாக்குதல்கள் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் மின்சார உற்பத்தி நிலையங்களை குறிவைத்து நடத்தப்படுகின்றன.கடந்த மாதம் உக்ரைன், ரஷ்யாவின் எண்ணெய் கிடங்குகள், ஆயுத கிடங்குகள் மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ரஷ்யாவுக்கு இழப்பு ஏற்பட்டது. இதற்கு இன்று ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது.
தற்போது செர்னோபில் அணு மின் நிலையம் மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள அனல் மின் நிலையம் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியது.
ரஷ்யா ஏவிய 143 டிரோன்களில் 95 டிரோன்களை எங்களுடைய ராணுவம் சுட்டு வீழ்த்தி விட்டது. 46 டிரோன்கள் இலக்கை அடையவில்லை. அவற்றால் பெரிய சேதம் எதுவும் இல்லை என ஜெலன்ஸ்கி கூறினார்.