மாலியில் தங்கச் சுரங்க விபத்தில் சிக்கி 48 பேர் பலி

16 மாசி 2025 ஞாயிறு 17:27 | பார்வைகள் : 1348
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில், பெண்கள் 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் கெனீயா மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்க சுரங்கம் ஒன்று இயங்கி வந்துள்ளது.
இந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்துள்ளனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த விபத்தில் சிக்கி, பெண்கள் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மீட்பு பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடந்த ஜனவரி 29ம் தேதி, கங்காபா மாவட்டம் கூலிகோரோ பகுதியில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.