டில்லியில் அதிகாலையில் நில அதிர்வு; வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்

17 மாசி 2025 திங்கள் 03:45 | பார்வைகள் : 519
டில்லியில் இன்று (பிப்.,17) காலை 5.36 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 4 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இது குறித்து டில்லிவாசிகள் தங்களது கருத்தை தெரிவித்தனர்.
டில்லி ரயில் நிலையத்தில், விற்பனையாளர் அனிஷ் கூறியதாவது: எல்லா கட்டடங்களும் அதிர துவங்கின. வாடிக்கையாளர்கள் அலறத் தொடங்கினர், என்றார்.
ரயிலுக்காகக் காத்திருந்த ஒரு பயணி கூறியதாவது: இங்கே ஒரு ரயில், ஓடுவது போல் உணர்ந்தேன். எல்லா பயணிகளும் குலுங்க துவங்கியதும் பீதி அடைந்தனர், என்றார்.
மற்றொரு பயணி ஒருவர் கூறியதாவது: குறைந்த நேரமே நில அதிர்வு ஏற்பட்டது. ஆனால் தீவிரம் மிக அதிகமாக இருந்தது. எல்லா ரயிலும் அதிக வேகத்தில் வந்தது போல் உணர்ந்தேன்', என்றார்.
காசியாபாத்தில் வசிப்பவர் ஒருவர் கூறுகையில், 'அதிர்வுகள் ரொம்ப அதிகமாக இருந்தன. இதற்கு முன்பு நான் இப்படி உணர்ந்ததில்லை. முழு கட்டடமும் குலுங்கியது, என்றார்.
ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பயணி கூறியதாவது: நான் காத்திருப்பு அறையில் இருந்தேன். அனைவரும் அங்கிருந்து அவசரமாக வெளியேறினர். ஏதோ ஒரு பாலம் அல்லது ஏதோ பெரிய கட்டடம் இடிந்து விழுந்தது போல் உணர்ந்தேன், என்றார்.