முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுங்க; டில்லிவாசிகளுக்கு மோடி அறிவுரை

17 மாசி 2025 திங்கள் 03:49 | பார்வைகள் : 1147
டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட நிலையில், 'பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்' என மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.
புதுடில்லியில் பல பகுதிகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன. இதை உணர்ந்த மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். இது தொடர்பாக, சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
* டில்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
* மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும்.
* பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் எச்சரிக்கையாக இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.
* நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.