கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் - மருத்துவமனை வாசலில் வீசப்பட்ட மூவர்!!

17 மாசி 2025 திங்கள் 06:07 | பார்வைகள் : 5337
கத்திக்குத்துக்கு இலக்கான நபர்கள் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தாமாகவே மருத்துவமனையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Créteil (Val-de-Marne) நகரில் உள்ள Henri-Mondor மருத்துவமனை வாசலில் பெப்ரவரி 14, வெள்ளிக்கிழமை இரவு அவர்கள் வீசப்பட்டனர். வயது குறிப்பிடப்படாத மூவர், துப்பாக்கிச்சூட்டு காயங்களுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.
உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை இடம்பெற்று வருகிறது.
அதேவேளை, காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் சிகிச்சை இடம்பெற்று வருகிறது.