"பெண்களே நோயை ஊதிப் பெரிதாக்காதீர்கள், பரிசோதனை செய்யுங்கள்" CSE Paris.

17 மாசி 2025 திங்கள் 08:07 | பார்வைகள் : 4693
2023 இல் கண்டறியப்பட்ட மார்பக புற்றுநோய்களில் 14% சதவீதம் 40 வயது முதல் முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், 1990களில் இருந்து குறித்த வயதினரிட்கிடையில் மார்பகப் புற்றுநோய் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்பக புற்றுநோயைப் பொறுத்தவரை ஆரம்ப நிலையில் காண்டறியப்படும் பட்சத்தில் இன்றைய மருத்துவ உலகம் 100% சதவீதம் முழுமையாக குணப்படுத்த முடியும் என்னும் நிலையுள்ளது, ஆனால் அதிகமான பெண்கள் தங்களின் முதல் 'mammographie' பரிசோதனையை செய்து கொள்வதில் அதிகம் தயக்கம் காட்டி வருகின்றனர் என CSE Paris (centre de sénologie et d'échographie) அமைப்பின் தலைவி மருத்துவர் Patrick Toubiana கவலை தெரிவித்துள்ளார்.
பெண்கள் நாற்பது வயதை நெருங்கும் போது 'mammographie' பரிசோதனையை தாமாக முன்வந்து செய்து கொள்வதன் மூலம் தங்களை மார்பக புற்றுநோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும், தாமதமாக செய்யும்போது நோய் அடுத்த கட்டத்தை அடைந்திருக்கும் நிலை ஏற்பட்டால் சிகிச்சையும் சிக்கலாகி விடும், பின்னர் மார்பகங்களை அகற்ற வேண்டிய நிலைகூட ஏற்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் மருத்துவ துறையை பொறுத்தவரை மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சையின் முன்னரும், பின்னருமான மருத்துவ செலவுகளை முழுமையாக அரசே ஏற்றுக்கொள்ளும் நடைமுறை இன்றைய நிலையில் காணப்படுகிறது என்பது இங்கு குறிப்பிட தக்கது.