CSK அணிக்கு முதல் போட்டியே முன்னாள் சாம்பியனுடன்….!

17 மாசி 2025 திங்கள் 08:15 | பார்வைகள் : 716
2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது.
நேற்றைய தினம் ஐபிஎல் (IPL) 2025 தொடரின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது.
மார்ச் 22ஆம் திகதி தொடங்கும் இந்த தொடரின் முதல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் மோதுகின்றன.
அதேபோல் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் தனது முதல் போட்டியில், CSK அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டிக்கு எப்போதுமே சென்னை ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும்.
அந்த வகையில் முதலாவது போட்டியே அந்த அணியுடன் என்பதாலும், தோனியின் ஆட்டத்தை சேப்பாக்கத்தில் காணவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதன் காரணமாக எம்.எஸ்.தோனி-ஐ (MS.Dhoni) அவரது ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.