Paristamil Navigation Paristamil advert login

தேவாலயத்துக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் - நேற்றைய தொடர்ச்சி!!

தேவாலயத்துக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் - நேற்றைய தொடர்ச்சி!!

13 ஐப்பசி 2017 வெள்ளி 12:30 | பார்வைகள் : 19873


ஏதொரு பாவமும் அறியாத இறைத்தந்தை Jacques Hamel இன் இரத்த நாளங்களை கூரான கத்தி அறுத்தெறிய, துடிப்புடன் அடங்கியது அவரது ஆத்மா. 
 
இந்த தாக்குதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டிய கட்டாயத்தில் BRI படையினர் வெளியில் ஆயுதங்களுடன் நின்றிருந்தனர். 
 
'நீங்கள் கிருஸ்தவர்கள்.. எங்களை வெளியேற்றப்பார்க்கிறீர்கள்!' என பயங்கரவாதிகளில் ஒருவன் கூச்சலிட்டான். திரு குர்ரானில் இருந்து சில வார்த்தைகளை உச்சரித்து 'நாங்கள் எங்கள் யுத்தத்தை கைவிட மாட்டோம்!' என சூழுரைத்தார்கள். காவல்துறையினர் ஆயுதங்களை தயார்ப்படுத்திக்கொண்டார்கள்..
 
சில நிமிடங்களுக்குள்ளாக தான் பயங்கரவாதிகளுக்கு ஓர் உண்மை தெரியவந்தது.. தாம் இன்னும் உயிருடன் இருப்பதும்...வெளியே BRI படையினர் சுற்றி வளைத்துக்கொண்டு நிற்பதும். 
 
உயிர் பயம் தொற்றிக்கொள்ள.. 10.45 மணிக்கு பயங்கரவாதிகள் தேவாலயத்துக்குள் இருந்து தப்பி ஓடுகிறார்கள். தேவாலயத்தை விட்டு வெளியேறியது BRI படையினர் துப்பாக்கியை முழக்க, இரு பயங்கரவாதிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழக்கின்றனர். 
 
அப்பகுதி, இறை தூதர் என கருதப்பட்ட தந்தை Jacques Hamel காக, கண்ணீர் வடித்தது. மிகவும் அன்பும் கருணையும் கொண்டவர். அவரின் பிரிவில் இருந்து மீள அப்பகுதி மக்களுக்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்