மகரந்த ஒவ்வாமை.. 30 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

17 மாசி 2025 திங்கள் 10:54 | பார்வைகள் : 3763
மகரந்த ஒவ்வாமை காரணமாக நாட்டின் 30 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு மற்றும் தென்மேற்கு மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சின் தேசிய வான் உயிரியல் கண்காணிப்பு வலையமைப்பு நிறுவனம் (Réseau National de Surveillance Aérobiologique) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. நாட்டின் 30 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ நிற எச்சரிக்கையும், ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தில் கலந்துகொள்ள இந்த மகரந்த துகளினால் ஒவ்வாமை, கண் எரிச்சல், சுவாசப்பிரச்சனைகள் ஏற்படும் எனவும், எளிதில் தொற்றுக்குள்ளாகுபவர்கள், நீண்டநாள் சுவாசப்பிரச்சனை கொண்டோர், வயோதிபர்கள் மற்றும் குழந்தைகள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்கும் படி அறிவுத்தப்பட்டுள்ளது.