Paristamil Navigation Paristamil advert login

சினிமாவை விட்டு விலகும் சாய் பல்லவி?

சினிமாவை விட்டு விலகும் சாய் பல்லவி?

17 மாசி 2025 திங்கள் 12:06 | பார்வைகள் : 941


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. நடிகர்களை விட அதிக ஃபேன் ஃபாலோயிங் கொண்டுள்ளார். சாய் பல்லவியின் முழு பெயர் சாய் பல்லவி செந்தாமரை கண்ணன். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நட்த்துள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பிறந்து வளர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. செந்தாமரை கண்ணன் மற்றும் ராதா தம்பதிக்கு மகளாக பிறந்தவர் தான் சாய் பல்லவி. இவருக்கு பூஜா கண்ணன் என்ற ஒரு சகோதரியும் இருக்கிறார். இவரும் ஒரு நடிகை.

பள்ளி படிப்பை முடித்த சாய் பல்லவி 2016 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஜார்ஜியாவில் உள்ள பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான திபிலிசி மாநில மருத்துவ பல்கலைக் கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்துள்ளார். அவர் 2020ஆம் ஆண்டு திருச்சியில் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிக்கான தேர்வையும் (FMGE) எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் அவர் மருத்துராக பணியாற்றவில்லை. தற்போது வரையில் அவர் மருத்துவராக படித்து முடித்த நிலையில் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் அடுத்தடுத்து 2 ஹிட் படங்களை கொடுத்த சாய் பல்லவி இப்போது சினிமாவை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. கஸ்தூரி மான், தாம் தூம் ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் அது துணை நடிகை ரோலாகவே பார்க்கப்பட்டது. அதன் பிறகு தான் மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்தார். மலர் டீச்சராக கல்லூரி பேராசிரியையாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டார். அதுமட்டுமின்றி இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு நடன இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

தியா, மாரி 2, என்ஜிகே ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். கடைசியாக அமரன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு தண்டேல் என்ற படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்திருக்கிறது
 

இப்படி அடுத்தடுத்து 2 ஹிட் படங்களை கொடுத்த சாய் பல்லவி தற்போது மருத்துவராக புதிய வாழ்க்கையைத் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சினிமாவில் நல்ல நிலையில் இருக்கும் இவர், திடீரென இந்த முடிவை எடுத்தது ஏன்? மற்ற நடிகைகளைப் போலல்லாமல், சாய் பல்லவி தனித்துவமானவர். கதை பிடிக்கவில்லை என்றால், முன்னணி நடிகர்களின் படங்களைக் கூட நிராகரிக்கும் துணிச்சல் கொண்டவர். மகேஷ் பாபு பட வாய்ப்பு வந்தபோது, கதாபாத்திரம் பிடிக்கவில்லை என்று நிராகரித்தார்.

சமீபத்தில் சாய் பல்லவி சினிமாவை விட்டு விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நல்ல நிலையில் இருக்கும்போதே ஏன் இந்த முடிவு? முன்னதாகவும் இதுபோன்ற செய்திகள் வந்தன. சாய் பல்லவிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் சினிமாவை விட்டு விலகுவார் என்றும் அப்போது சொல்லப்பட்டது. ஆனால், அந்தச் செய்திகளை மறுத்த சாய் பல்லவி திருமணம் செய்துகொள்வேனா என்றே தெரியாது என்று கூறினார்.

நடிகையாக பெற்ற புகழைப் போலவே, மருத்துவராகவும் சாதிக்க வேண்டும் என்று சாய் பல்லவி விரும்புகிறார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். கோயம்புத்தூரில் சொந்தமாக மருத்துவமனை கட்டி, மருத்துவராக செட்டில் ஆக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சினிமாவில் நடித்துக்கொண்டே, மருத்துவமனையைக் கட்டி நிர்வகிக்கவும் திட்டமிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து ஓய்வு பெற்று, முழுநேர மருத்துவராகப் பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்