எஸ்.ஜே.சூர்யா 'ஜெயிலர் 2' படத்தில் இணைகிறாரா ?

17 மாசி 2025 திங்கள் 12:15 | பார்வைகள் : 1654
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது பாகத்தில் வில்லனாக நடித்த நெல்சன், நடிப்பு அரக்கனை தேர்வு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், இன்னொரு பக்கம், சில ஆச்சரியமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்து வருகிறார்கள்.
அந்த வகையில், ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாகம் வெற்றி பெற, வலிமையான வில்லன் கதாபாத்திரத்தில் விநாயகன் நடித்ததே என்பது அனைவரும் அறிந்ததே. முதல் பாகத்தில் விநாயகன் கேரக்டர் கொல்லப்பட்டதால், அதேபோல், இரண்டாம் பாகத்திலும் ஒரு வலிமையான வில்லன் கதாபாத்திரத்திற்காக, இயக்குநர் நெல்சன், நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் உறுதியாக இருந்தால், ரஜினிகாந்துடன் எஸ்.ஜே.சூர்யா முதல் முறையாக இணைந்து நடிப்பார். மேலும், ஏற்கனவே பல படங்களில் வில்லனாக கலக்கிய அவர், ‘ஜெயிலர் 2’ வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.