இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளராக சுமந்திரன் நியமனம்!

17 மாசி 2025 திங்கள் 12:55 | பார்வைகள் : 516
இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்பட்டார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதுவரை அப்ப பதவியில் இருந்த மருத்துவர் ப.சத்தியலிங்கம் எம்.பி. சுகவீனம் காரணமாக பதவியில் தான் தொடர்ந்து இருக்க முடியாது என இன்றைய கூட்டத்தில் அறிவித்தமையை அடுத்து கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.